Translation of Nazim Hikmet Ran's Select Poems
நஜிம் ஹிக்மத்: துருக்கியக் கவிஞர்
மிகக் குறைந்த இடத்தைக் கொண்டுள்ள சிறை, அதற்கு ஈடாக மிக அதிக நேரத்தைக் கொடுக்கிறது; ஒரு கைதியினால் இரண்டுமே எளிதில் உணரப்படும். மனிதனின் நிலைமை அண்டத்தில் இருப்பதைப் பிரதிபலிக்கும் இந்த விகிதம்தான் கிறிஸ்துவத் தத்துவச் சிந்தனையின் உள்ளடங்கிய உவமையாகவும், இலக்கியப் படைப்பிற்கு பேறுகாலச் செவிலியாகவும் சிறையடைப்பைச் செய்துள்ளது என்பது இயற்கையேயாகும்....சிறை ஒன்றும் உங்கள் பருப்பொருள் கருத்துக்களை நீங்கள் துறந்துவிடச் செய்துவிடுவதில்லை. மாறாக அவற்றை அது மிகத் துல்லியமான வெளிப்பாடுகளாக மாற்றிவிடுகிறது. உண்மையில், சிறை என்பது உங்கள் தத்துவச் சிந்தனை, வரலாற்றுணர்வு இன்னும் பிறவற்றை உங்கள் அன்றாட நடப்பு நெறியின் நேர்த்தியான பதிப்பாக மாற்றுகிறது.
20ம் நூற்றாண்டில், எழுத்தாளர்களைச் சிறையில் அடைப்பது நிலத்தை ஒட்டி வருகிறது. துருக்கியின் சமீப காலத்திய மிகப் பெரிய கவியான நஜிம் ஹிக்மத் (1902-1963) அவருடை வாழ்வின் பாதிப் படைப்புக்களை துருக்கியச் சிறைகளில் ஒரு அரசியல் கைதியாக எழுதினார். அவர் தொடர்ச்சியாகச் சிறையில் இருந்ததால், ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டிருந்த கவிதைகள் (நீடித்த காலம் இருக்கும் முழுத்திறனையும் அவை கொண்டவை), எப்படியும் பெரும் தொலைவுகளை வெற்றி கண்டு முடிவிலாப் பிரிவுகளையும் கடக்கின்றன.
ஒவ்வொரு கதவிலும் வந்து நிற்கிறேன்
ஒவ்வொரு கதவிலும் வந்து நிற்கிறேன் நான்
எவருக்கும் கேட்கவில்லை
என் சப்தமற்ற காலடி ஓசை.
கதவைத் தட்டுகிறேன்
இருந்தும் யார் கண்ணிலும் படாமலிருக்கிறேன்.
ஏனென்றால்
நான் இறந்திருக்கிறேன்.
நான் இறந்திருக்கிறேன்.
இறந்தபோது எனக்கு ஏழு வயது
நெடு நாட்களுக்கு முன்
நான் ஹிரோஹிமா வில்
அப்போதை போலவே
இப்போதும் அதே 7 வயதுதான்
குழந்தைகள் மரணிக்கும்போது
அவர்கள் வளர்வதில்லை.
சுழலும் தீச்சுவாலையால்
என் மயிர் கருகுகிறது.
என் கண்பார்வை மங்கலாகிறது.
என் கண்பார்வை குருடாகிறது.
மரணம் வந்தது
என் எலும்புகளை புழுதியாக்கியது
அப்புழுதி காற்றில் விதரடிக்கப்பட்டது.
எனக்கு பழங்கள் வேண்டாம். உணவு வேண்டாம்.
இனிப்பு ரொட்டியும் எவையுமே வேண்டாம்
வேண்டாம் எனக்கென நான் எதையும் கேட்கவிலலை.
ஏனெனில் நான் இறந்து போயிருக்கிறேன்.
நான் இறந்து போயிருக்கிறேன்.
நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான்
அமைதிக்காக போராடுங்கள்,
இன்று, அமைதிக்காக போராடுங்கள்
அப்போதுதான் இவ்வுலகின் குழந்தைகள்
வாழ, வளர, சிரித்து விளையாட முடியும்.
முழுப் புத்தகத்தையும் வாசிக்க தொடர்பு கொள்ளலாம்: drtmarx@gmail.com

No comments:
Post a Comment