Monday 29 April 2013

My Lecture on Hugo Chavez


Report published in Theekathir dated 28-04-2013

புதுச்சேரி, ஏப். 27-வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஓய்வூதியம் அளித்தவர் தோழர் சாவேஸ் என்று பேராசிரியர் மார்க்ஸ் கூறினார்.இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் புதுச் சேரி பிளிஸ் ஹாலில் கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத் தரங்கத்திற்கு கழகத்தின் புதுச்சேரி தலைவர் கே.முரு கன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச். பாலமோகனன் முன்னிலை வகித்தார். ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.கிருஷ்ண மூர்த்தி அனைவரையும் வர வேற்றார்.புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் டி.மார்க்ஸ் சிறப்பு அழைப்பாளராக பங் கேற்று, மறைந்த முன்னாள் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் வாழ்வும் பணியும்என்ற தலைப்பில் பேசியதா வது:அமெரிக்க ஆட்சியின் கீழ் செயல்பட்ட வெனிசுலா வில் உணவு பஞ்சம் ஏற்பட் டது. அப்போது முதலாளி களின் உணவு கிடங்குகளில் மக்கள் உணவு தானியங் களை தூக்கிச் சென்ற நிலை இருந்தது. இத்தகைய நிலையை எதிர்த்து சாவேஸ் மக்களை திரட்டினார். மேலும் அத்த கைய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வெற்றி யும் பெற்றார். தான் ஜனாதி பதியாக பொறுப்பேற்ற சா வேஸ் பெண்களுக்கு அதிகா ரங்களை வழங்கினார். பெண்கள் குடும்பத் தலை வர்களாக இருந்த குடும்பங் களுக்கு நிலம் வழங்குவதி லும், இன்னும் பல திட்டங் கள் அமல்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்தார். வீட்டில் வீட்டு வேலை செய் யும் பெண்களின் வேலையை அங்கீகரித்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்கு நேர்மாறாக நமது இந் திய நாடு உள்ளது. தற்போது ஓய்வூதியம் பெறுவர்களுக்கு இனிமேல் ஓய்வூதியம் கிடை யாது என்று கூறி அதற்காக புதிய ஓய்வூதிய மசோதாவை நமது ஆட்சியாளர்கள் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் தோழர் ஹியூகோ சாவேஸை நாம் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசி னார்.இதேபோல் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் மேற்கொள் ளும் மாற்றுப்பாதைஎன்ற தலைப்பில்புதுவைபல்கலைக் கழக பேராசிரியர் மோக னன் பேசினார். நிறைவாக மானு டவியல் ஆராய்ச்சி மாணவர் அருண்குமார் நன்றி கூறி னார். கருத்தரங்கத்தில் திர ளான மாணவர்கள், அறிவு ஜீவிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment